Pages

Sunday, April 28, 2019

மனசிக்கலும் மலச்சிக்கலும்… மன சிக்கல் (Depression) எப்படி காரணமாகிறது?

#மனசிக்கலும்_மலச்சிக்கலும் பற்றிப் பார்க்க இருக்கிறோம். மனதில் சிக்கல் (Depression) இருந்தால் மலச்சிக்கல் வரும்.
மனதில் வேண்டாத குப்பைகள், தானாக சேர்ந்த குப்பைகள், மற்றவர்களால் சேர்க்கப்பட்ட குப்பைகள் சேர்ந்து மலச்சிக்கலை க்ஷ்கட்டாயமாக ஏற்படுத்தும்.
சர்க்கரை நோயோ ரத்த அழுத்தமோ ஒரு நோய் கிடையாது. ஆனால், மலச்சிக்கல் என்பது நோய். அதைத் தீர்த்தே ஆக வேண்டும். இல்லையென்றால் உடலைக் கொல்லும் ஆனால் சிறுக சிறுக…
சில காரணங்கள்
உணவு, வாழ்வியல் பழக்கம், இட மாற்றம், சூழல் இவை பொதுவான காரணங்களாக சொல்லப்பட்டாலும் மனச்சிக்கல் ஒரு பெரும் காரணம். முதலில் கண்டறிய வேண்டியது இதைத்தான்.
காலைக்கடன் என்பது காலையில் தீர்க்க வேண்டிய ஒன்று
சமீபத்தில் சிகிச்சைக்காக வந்திருந்தார் ஒருவர். காலில் உள்ளங்கை அளவு புண்… சீழ் வழிந்து, நின்று போய் கட்டுப்போட்டு வந்தார். அவரின் கால்கள் கரியால் பூசப்பட்டதுபோல அவ்வளவு கருப்பாக இருக்கிறது.
அவ்வளவும் கெட்ட ரத்தம்… அவ்வளவும் குப்பை… மனதில், உடலில் தேங்கியிருக்கிறது.
காலைக்கடன் என்பதற்கான அர்த்தமே காலையில் போக வேண்டியது எனப் புரிந்து கொள்ள முடியும். “அதற்கு நேரம், காலம் இல்லை எப்போது வேண்டுமானால் வரலாம். இரண்டு நாள் அல்லது மூன்று நாள்கூட ஆகும்” என்கிறார் அவர் மனைவி.
மலத்தை வெளியே தள்ளும் நேரம் காலை 5-7 இது பெருங்குடலுக்கான நேரம். மலத்தை தள்ளிக்கொண்டு மலத்தை வெளியேற்ற துரிதமாக செயல்படும் நேரம் அது. இதை தவறினால் நீங்கள் ஆரோக்கியத்தைத் தவற கூடும். கவனம் இருக்கட்டும்.
மனம் எப்படி சிக்கலாகிறது? (Depression)
தனக்கு பிடிக்காத வாழ்க்கை, தனக்கு பிடிக்காத வேலை, தனக்கு பிடிக்காத சூழல், தனக்கு பிடிக்காத துணை, தனக்கு பிடிக்காத படிப்பு, தனக்கு பிடிக்காத உறவுகள், தனக்கு பிடிக்காத அனைத்துமே மனச்சிக்கல்தான். இதனால் மலச்சிக்கலும்தான்.
இது அவரவர் தங்கள் சூழலை பொருத்திப் பார்த்துக் கொள்வது நல்லது.
மன சிக்கல் மலச்சிக்கலை மட்டுமல்ல வாழ்க்கையே சிதைக்கும்.
ஆம்… அதற்கு உதாரணமாக ஒருவர் சிகிச்சைக்கு வந்திருந்தார். கால்களில் சீழ் வழிந்து கொஞ்சம் ஆறியும் ஆறாமலும் ஒரு பெரிய புண், இரண்டு கைகளில் ஆங்காகே கட்டிகள்… மேலே நான் சொன்ன அதே நபர்தான்.
கால் முழுக்க கெட்ட ரத்தம் தேங்கி, கருகி கிடக்கிறது. மூளை மழுங்கி ஒவ்வொரு கேள்விகளுக்கும் 10 விநாடிகள் சிந்தித்து தொடர்பே இல்லாத பதிலை தொடர்பு படுத்தி சொல்ல முயற்சிக்கிறார். அவ்வளவும் மனக்குழப்பம்.
ஏன் இவ்வளவு மனக்குழப்பம். மிலிட்டிரி பள்ளியில் படிக்க வைக்க மிலிட்டரியாகவே மாறிய தந்தை. எதிர்க்க முடியாத தாய். 8 சகோதர சகோதரிகளைப் பிரிந்து தான் மட்டும் ஹாஸ்டல் வாழ்க்கை.
ஹாஸ்டல் படிப்பு பாதி, சோகம் மீதி. பிடிக்காததும் பிடித்ததும் நடந்ததா என்று கூட நினைவுப்படுத்த தெரியவில்லை.
இருப்பினும் பொறியியல் பட்டப்பிடிப்பு. தான் படிக்க விரும்பியதைத் தடுத்து தந்தையின் விருப்பப் படிப்பை மகன் படிக்கிறான். தொடர் தோல்வி மகனுக்கு…
விளைவாக ஹரியஸ்… கஷ்டப்பட்டு ஹரியஸ் கிளியர் செய்கிறார். மீண்டும் தந்தையின் கட்டாயத்தில் அரசு துறைகளில் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுகிறார். மத்திய அரசாங்க வேலை கிடைக்கிறது.
கை நிறைய சம்பளம்.. மத்திய அரசாங்க வேலை… எல்லாமே நன்றாக நடந்து முடிந்திருக்கிறது என அப்பா ஆனந்தமடைகிறார். இதில் அப்பாவுக்கு மட்டுமே ஆனந்தம்.
மத்திய அரசாங்க வேலையில் இருப்போருக்கு மனக்குழப்பமே மிச்சம். வேலை செய்கிறார் தன் திறனால் செய்ய முடிந்ததை செய்கிறார். அவ்வளவுதான்.
மனம் குழப்பம் முற்றியது. புத்தி மழுங்கியது. அப்பாவின் ஆபரேஷன் சக்ஸஸ். ஆனால், மகன் தோல்வி அடைந்துவிட்டான்.
தன் கனவுகளில், தன் சூழலில், தன் லட்சியத்தில், தன் வாழ்க்கையில் அவன் படுதோல்வி அடைந்துவிட்டான்.
சமூகமும் தூரத்து உறவுகள் கொஞ்சம் ஒரு மாதிரி, ஆனால் அரசாங்க வேலை இருக்கிறது எனத் தங்க குண்டூசியில் குத்துகிறது.
கிடைத்த பெண்ணை வைத்து தந்தையும் குடும்பமும் சேர்ந்து, திருமணத்தை நடத்தி வைக்கின்றனர். அவ்வப்போது பணம் கொடுத்து கொஞ்சம் உண்மையும் கொஞ்சம் பொய்யும் கலந்து வாழ செய்யும் ஏற்பாடுகளை முழுமூச்சாக செய்கின்றனர்.
”இல்லறம் இருந்தால்தான் குழந்தைகள் வரும். இங்கு நானே பல ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்துவிட்டேன்… தோற்றுவிட்டேன்… எங்கிருந்து குடும்பத்தை நடத்த…” என்று மகன் நினைக்கிறான். ஒர் உயிருடன் இப்போது இரண்டு உயிர்களுக்கும் பாதிப்பு… வாழ்க்கையும் இல்லை. மகிழ்ச்சியும் இல்லை. ஆனால், பணமும் நோயும் நிறையவே இருக்கிறது.
“எங்கள் அப்பா 9 பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்தார். எல்லோரும் டாப்பாக இருக்கிறோம். இவன் ஒருவன்தான் புத்தி சரியில்லாமல் இருக்கிறான்” என்று சொல்கிறார் வந்தவரின் அக்கா.
Operation Success but patient died என்பார்களே அதை நான் நேரில் பார்க்கிறேன். 48 கால வாழ்க்கை திரும்ப கிடைக்குமா? இளமைக்காலம்? தன் கனவுகள்? தான் யார்? தான் என்னவாக இருக்க கனவு கண்டோம்? எதுவுமே தெரியாமல் சிந்தித்தபடியே நிற்கிறார் மகன்.
அவரைப் பார்க்கையில் என் கண்களுக்கு உடல் மட்டுமே தெரிகிறது…
இந்த சூழலுக்கு ஆளாக்கிய தன் தந்தை இன்று இல்லை. ஆனால், அவர் விதைத்துவிட்ட வினை ஆலமரமாய் நிற்கிறது.
மனநல மருத்துவர்கள் பக்கம் பக்கமாய் மருந்து கொடுத்துள்ளனர். புண்கள் ஆற அலோபதி மருத்துவர்களும் மருந்து கொடுத்துள்ளனர்.
உடலுக்கு வயது 48 ஆக இருக்கிறது. மனம் மட்டும் இளமைப் பருவத்தில் பொறியியல் இறுதி ஆண்டிலே நின்றுவிட்டது. அதற்கு மேல் அவருக்கு நகரவில்லை. நினைவும் இல்லை.
மனம் செயல் இழந்துவிட்டது. உயிர் மட்டும் உடலில் கிடக்கிறது ஒரு ஓரமாக… ஏன் என்பது அவருக்கும் தெரியவில்லை.
மனிதன் இழக்க வேண்டியதை அனைத்தும் இழந்து புத்தி செயல்படாமல் இருக்கும் நபரை பார்க்கும் மனைவிக்கும் கஷ்டம். உடன் பிறந்தவர்களுக்கு கஷ்டம்.
பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள்
நல்லது செய்கிறேன் என்பதற்கு முன், உங்கள் மகனுக்கு / மகளுக்கு நல்லது தானா விருப்பம்தானா எனத் தெரிந்து கொண்டு செய்யுங்கள்.
பெற்றோரின் கனவுகள் நிறைவேறவில்லை என்றால் அதை நிறைவு செய்ய பிள்ளைகளை எதிர்பார்ப்பது பெரும் தவறு.
மிரட்டல், அடித்தல், உதைத்தல், காரி துப்புதல், அவமானப்படுத்துதல் என்றைக்குமே தீர்வாகாது. அன்பாக எடுத்துச் சொல்லுங்கள். படிக்க வைக்கவோ படிப்பை நிறுத்தவோ உங்கள் விருப்பப்படி குழந்தைகள் நடக்கவோ அன்பை மட்டும் ஆயுதமாக எடுங்கள். ஆனால், அது பிளாக்மெயிலாக இருக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
இன்று நீங்கள் இல்லை. ஆனால், உங்கள் மகன் இருக்கிறான். இருக்கிறான் என்று மட்டுமே சொல்ல முடியும். உயிர் இருக்கிறது இதயம் துடிக்கிறது. இந்த அடையாளம் மட்டுமே தெரிகிறது. வேறு எதுவும் தெரியவில்லை. இதையெல்லாம் எதையும் அறியாத மனைவி உடன் இருக்கிறாள். அவளும் இருக்கிறாள் என்றே சொல்ல தோன்றுகிறது. ஏனெனில் அவளுக்கும் ஏன் என காரணம் தெரியவில்லை.
இந்தப் பதிவு ஒவ்வொரு பெற்றோருக்கும் சமர்பிக்கிறேன். உங்கள் குழந்தைகள் உங்கள் மூலமாக வந்தவர்களே தவிர உங்கள் கனவுகளை ஏற்க வந்தவர்கள் இல்லை. இதை நீங்கள் புரிந்து கொண்டுதான் ஆகவேண்டும்.
நீங்கள் வேறு… உங்கள் குழந்தைகள் வேறு.
தீர்வு என்ன?
ரெய்கியில் அனைத்து சக்கரங்களுக்கு ஹீலிங் தர வேண்டும். முக்கியமாக ஆக்ஞா, அனாஹதம், ஸ்வாதிஷ்டானா, மூலாதாரம்.
கால்களில் புண்கள் இருப்பதால் மூலாதாரத்துக்கு கூடுதலாக ரெய்கி ஹீலிங் தரவேண்டும்.
வெயின்களில் அடைப்பு இருப்பதால் சுஜோக் அக்குபஞ்சரில், சிறுகுடல் மெரிடியனில் தகுந்த புள்ளியில் நீடில் போட வேண்டும்.
பிட்யூட்டரி, பீனியல், அட்ரினல், சிறுநீரகங்கள், கல்லீரல், அடிவயிறு ஆகிய பகுதிகளுக்கு உள்ளங்கை சுஜோக் அக்கு புள்ளிகள் மூலம் அழுத்தம் தர வேண்டும்.
ஹீலிங் எடுப்பவரின் தனிப்பட்ட முயற்சி மற்றும் ஒத்துழைப்பு கட்டாயம் தேவை. அதுபோல குடும்பத்தின் ஒத்துழைப்பும் ஆகியவற்றைப் பொறுத்தே முழுமையான தீர்வுக்கு கொண்டு செல்ல முடியும். இதற்கு கடுமையான முயற்சி தேவை.

0 comments:

Post a Comment